Monday, August 3, 2009

தொல்காப்பியப் பூங்காவும் திருவள்ளுவர் சிலைதிறப்பும்

தமிழக முதல்வர் கலைஞர் ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு பயணமாகி இருக்கிறார். பெங்களூருவில் ஆகஸ்ட் 9-ஆம் நாள் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைப்பதையும் தன் பயணத்தின் முக்கிய பகுதியாகக் கொண்டிருக்கிறார்.

சென்ற முறை பெங்களூரு சென்ற போது, நெடுங்காலமாகத் தமிழ் அறிஞர்களும் புலவர்களுமே தொடப் பயப்படும் தொல்காப்பியத்தை, ‘அது வனமல்ல; பூங்கா’ என்று நிரூபிக்கும் வண்ணம் ஒரு நூல் எழுதி (தொல்காப்பியப் பூங்கா) தமிழன்னைக்கு ஒரு நிஜ அணிகலனைச் செப்பனிட்டுக் கொண்டு வந்தார். இந்த முறை . . .

பலகாலமாக (1992 முதல்) திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைத்து விட்டு வர இருக்கிறார். இதுவும் தமிழன்னைக்கு ஓர் அணிகலன் தானே?

இல்லை என்று தோன்றுகிறது.

சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை விரைவில் திறக்கப்படும் என்கிற பரஸ்பர ஏற்பாட்டில் இந்தத் திறப்பு விழா!

இது என்ன பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் வகையான பண்டமாற்றா? ‘எங்க வீட்டுப் பொண்ணு உங்க வீட்டில் கஷ்டப்பட்டா உங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டில் நல்ல இருக்க முடியுமான்னு பார்த்துக்கோங்க’ என்கிற விதமான மறைமுக மிரட்டல் இருக்கிற மாதிரியான சம்பந்தமாகக் கூட இந்த ஏற்பாட்டினை நினைக்க முடியவில்லை.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்தச் சிலையைத் திறக்க விடாமல் எதிர்ப்புக் காட்டி வந்த கன்னட அமைப்புகள் மனம் மாறி வள்ளுவர் மீது பாசம் கொண்டு வேண்டுகோள் விடுத்து இந்தச் சிலை திறப்பு விழா நடந்தால் கூட ஓரளவுக்கு யோசிக்கலாம். இன்னும் அந்த மாநில முதலமைச்சர் அந்த அமைப்புகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்; அல்லது கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இப்படிச் சிக்கல் நிறைந்த இடத்தில் பிடிவாதமாக திருவள்ளுவரைப் பலி கொடுக்கத் தான் வேண்டுமா?

அந்தச் சிலைக்கு எவ்வளவு காலம் பாதுகாப்பு உத்தரவாதம்? அதிகபட்சமாக சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்படும் வரை தான். அதன்பிறகு தமிழர் மீது என்ன எரிச்சல் வந்தாலும், கன்னட அன்பர்கள்(?) தம் அன்பை வெளிப்படுத்தப் போகும் முதல் தலம் திருவள்ளுவர் சிலையாகத் தான் இருக்கும். இங்கே சர்வக்ஞர் சிலை? அட, அது தமிழ் மண்ணில் அல்லவா இருக்கிறது? ‘நடுநிலைவாதிகள்’ நிறைந்த இந்த மண்ணில் இஸட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கப் போகும் அந்த சிலை மீது எச்சமிட காக்கை குருவிகளுக்குக் கூடஅனுமதி மறுக்கப் பட்டிருக்கும்.

அங்கே திருவள்ளுவர் தான் படாதபாடு படுவார். அங்குள்ள தமிழர்கள் வாய்திறந்தால் அவர்கள் வீடுகளில் கல்லெறியப்படும். இங்குள்ள தமிழர்கள் (நான் உட்பட) அப்போதும், “தேசிய நீரோட்டம் வேகமாகப் பாயும் போது அதில் மூழ்கும் தமிழரின் கோவணங்கள் இந்த மாதிரி உருவப்படுவது சாத்தியமே; இதனைப் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முயலவேண்டும்” என்று பேசிக் கொண்டிருப்போம்.

திருவள்ளுவருக்குப் பார்த்துப் பார்த்து கோட்டம் எழுப்பிய கலைஞர், கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் சிலை எழுப்பி அழகு பார்த்த கலைஞர், குறளோவியம் எழுதிய கலைஞர், மாற்றாரும் மறுப்பு சொல்ல இயலாத உயர் தரத்தில் குறளுக்கு உரை எழுதிய கலைஞர் தன் கையாலேயே திருவள்ளுவருக்குச் செய்யப் போகும் அதிகபட்ச அவமரியாதையாகத் தான் இந்தச் சிலை திறப்பு அமையப் போகிறது.

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
(இகழ்வதையும் பொறுத்துக் கொண்டு மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்?)

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(தன்னை மதிக்காதவரின் பின் சென்று உயிர் வாழ்வதை விடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்)

* * *

14 comments:

said...

திருவள்ளுவருக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... :-(

Anonymous said...

hey i live in bangalore i never seen any hatred against me from kannada peoples . like me so many lakhs of peoples living happly here . why are writing like in a rude manner? dont u see good things arround u?

said...

இதக்கேக்குறதால நம்மள தான் சார் பைத்தியக்காரன்னு சொல்லுவானுவ...

said...

நன்றி சரவணகுமரன்,

said...

//hey i live in bangalore i never seen any hatred against me from kannada peoples . like me so many lakhs of peoples living happly here . why are writing like in a rude manner? dont u see good things arround u?//

நன்றி அனானி சார், கன்னடர்களும் தமிழர்களும் சண்டைக் கோழிகளாக அடித்துக் கொண்டபடி தான் வாழ்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. காவிரி, ஒகேனக்கல், வள்ளுவர் போன்ற வார்த்தைகளை உச்சரிக்காதவரை பிரச்னை வருவதில்லை.

நீங்கள் சொல்லும் அளவுக்கு பிணைப்பான இணக்கமான உறவு இருந்தால் ஒரு சிலை பதினெட்டு வருடம் மூடி இருக்க வேண்டிய அவசியம்?

said...

நன்றி வெங்கிராஜா சார்

//இதக்கேக்குறதால நம்மள தான் சார் பைத்தியக்காரன்னு சொல்லுவானுவ...//

வாஸ்தவம் தான்.

said...

//தமிழர் மீது என்ன எரிச்சல் வந்தாலும், கன்னட அன்பர்கள்(?) தம் அன்பை வெளிப்படுத்தப் போகும் முதல் தலம் திருவள்ளுவர் சிலையாகத் தான் இருக்கும். //
நூறு சதவிகித உண்மை. நடக்கட்டும். எவ்வளவோ பார்த்துட்டோம்... இத பார்க்க மாட்டமா....:)

Anonymous said...

@நீங்கள் சொல்லும் அளவுக்கு பிணைப்பான இணக்கமான உறவு இருந்தால் ஒரு சிலை பதினெட்டு வருடம் மூடி இருக்க வேண்டிய அவசியம்?@

wherever tamil people goes they make problem over there. they dont respect the local peoples culture , language and customs .

first of all tell me why you need a statue for thiruvalluvar?? what is the benefit we are going to achieve with that??

its nothing but showing our arrogance .
you can witness the same kind of behavior every where like in tharvi mumbai.

said...

நன்றி துரியோதனன் சார்

said...

அனானி நண்பரே!

//first of all tell me why you need a statue for thiruvalluvar?? what is the benefit we are going to achieve with that??//

"சர்வக்ஞரா? யார் அவர்? அவருக்கும் அயனாவரத்துக்கும் என்ன சம்பந்தம்? அவருக்கு அங்கே எதற்குச் சிலை?" என்று ஏதாவது கன்னட வலைப்பதிவிலோ பத்திரிகையிலோ எழுதிக் கேட்டு விட்டு அதன்பிறகான அனுபவங்களை மனசாட்சி பூர்வமாக எழுதுங்கள்.

Anonymous said...

see the photos in this post.
this may happen anytime after 14th for the real statue :-(

http://churumuri.wordpress.com/2009/08/04/who-said-if-fools-claim-they-were-right-agree/

said...

தேவையில்லாத வேலை.

said...

present sir

said...

ரத்னேஷ்,

உங்கள் பதிவை மி்ன்தமிழ் கூகுள்குழுவில் மேற்கோள் காட்டினேன்.
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/2e9c4580a4f8acf4

படித்தோர் உள்ள சபை. பழைய தமிழ் நூல்களைக் காக்க உள்ள இடம். பல எழுத்தாளர்கள் உள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு மடல்களே வரும். எனவே நேரத்தைத் தின்னாது. நீங்களும் வரலாம்.

அன்புடன்,
நா. கணேசன்